மதவாதத்துக்கு ஆதரவு அளித்த நிதிஷ் குமாருக்கு கன்னத்தில் அறை விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை ஒருவர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், " இந்தியாவில் "மதவாதத்துக்கு"

,==========================

* ஆதரவு தந்து "RSS கும்பலை"

==========================

* மீண்டும் ஆட்சியில் அமர வைத்த

* பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு

=============================

* இல்லை இல்லை..."பல்டி பாபு"

* நிதிஷ் குமாருக்கு "பளார்" என...

=============================

* கன்னத்தில் "ஒரு அறை விழுந்து"

விட்டது இன்று❗

=============================

* இந்தஅறை சாதாரணஅறைஅல்ல

=============================

* பாரத மாதாவின்... "அறை❗"

* இயற்கைஅன்னையின்"அறை‼"

* மதச்சார்பற்ற....இந்தியர்கள்...

* கொடுத்த "மரண அறை❗"

⚘❤🤝❤⚘❤👍❤⚘❤👌❤⚘✋

* மாற்றம் விரைவில் நடக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பீகார் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார் பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். மீண்டும் அந்த கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு வந்தார். இப்படி கூட்டணியை மாற்றி மாற்றி பீகாரின் முதல்வராக நீடித்து வருகிறார்.

Archive

இந்த நிலையில் மதவாத சக்திகளுக்கு ஆதரவு அளித்ததால் அவருக்கு இன்று கன்னத்தில் அறை விழுந்தது என்று சிலர் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பார்க்கும் போதே நிதிஷ் குமார் கன்னத்தில் அறை விழவில்லை என்பது தெரிகிறது. நிதிஷ்குமாரின் தோள்பட்டை பகுதியில் அந்த நபர் அடிக்கிறார். உடனடியாக பாதுகாவலர்கள் அந்த நபரைப் பிடித்துவிடுகின்றனர்.

இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று அறிய கூகுளில் நிதிஷ் குமாருக்கு விழுந்த அடி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்த சம்பவம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்திருப்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் அவர் பாஜக கூட்டணியில் தான் இருந்துள்ளார்.

2022ம் ஆண்டு வெளியான செய்திகளைப் பார்த்தோம். இந்த சம்பவம் தொடர்பாக பாட்னா மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. அதில், "தாக்குதல் நடத்திய நபரின் பெயர் சோட்டு என்கிற சங்கர் குமார் வர்மா (32) என்றும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இவரது மனைவி மற்றும் குழந்தை இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்... இதைத் தொடர்ந்து இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நிதிஷ்குமார் அறிவுறுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தாக்கிய பழைய வீடியோவை இப்போது நடந்ததாக தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் மூலம் இந்த வீடியோ பதிவு உண்மையை மறைத்து, தவறான தகவல் சேர்த்துப் பதிவிடப்பட்டிருப்பது உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: navbharattimes.indiatimes.com I Archive 1 I telegraphindia.com I Archive 2

முடிவு:

2022ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தாக்கிய வீடியோவை வைத்து மதவாத அரசியலுக்கு ஆதரவு அளித்ததால் நிதிஷ் குமாருக்கு கன்னத்தில் அடி விழுந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நிதிஷ் குமாருக்கு அடி விழுந்ததாகப் பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: Missing Context