அகமதாபாத் விமான விபத்துக்கு முன் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இதுவா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’அகமதாபாத் விமான விபத்தில் பலியான பயணி எடுத்த கடைசி வீடியோ’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *இதயத்தை உடைக்கும்:😭 ஏர் இந்தியா விமானம் AI171 சம்பந்தப்பட்ட குஜராத்தின் அகமதாபாத் அருகே சோகமான விமான விபத்துக்கு… 

சில நிமிடங்களுக்கு முன்பு பயணி ஒருவரின் பேஸ்புக் லைவ் வீடியோ வெளியாகியுள்ளது.*  

 எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பார்கள்.கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது.. 

இவ்வளவுதான் வாழ்க்கை.😭

 அனைவருக்கும் பிரார்த்தனைகள்.. ஓம் சாந்தி 😭🙏 ” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது தவறான தகவல், என தெரியவந்தது. ஆம், இவர்கள் பரப்பும் வீடியோவுக்கும், தற்போது நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

இது கடந்த 2023ம் ஆண்டு நேபாளம் நாட்டில் ஏற்பட்ட Yeti Airlines Flight Crash தொடர்பான வீடியோ. 

இந்தியாவை சேர்ந்த சோனு ஜெய்ஸ்வால் என்ற நபர், நேபாளம் நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தேதி ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பாக, தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர், ஃபேஸ்புக் லைவ் முறையில் தனது விமான பயணத்தை வீடியோவாக பகிர்ந்துகொண்டார். ஆனால், ஃபேஸ்புக் லைவ் முடியும் முன்பாகவே, அந்த விமானம் விபத்தில் சிக்கியது சோகக்கதை.  

India Today l Hindustan Times l Zee News 

குறிப்பிட்ட வீடியோவை எடுத்து, தற்போதைய அகமதாபாத் விமான விபத்துடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:அகமதாபாத் விமான விபத்துக்கு முன் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply