
‘’நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அட மானம் கெட்ட திமுக , அதிமுக நீங்க இவருகிட்ட ஆளுக்கு 2 கப் வாங்கி குடிங்கயா.
அப்படியாவது ஏதாவது வருதானு பார்ப்போம்
@arivalayam
@mkstalin
@AIADMKOfficial
@EPSTamilNadu,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
TNMedia24 என்ற ஊடகம் கடந்த 2023ம் ஆண்டு வெளியிட்ட செய்தியை மேற்கண்ட பதிவில், மறுபகிர்வு செய்துள்ளனர்.

இது பார்ப்பதற்கு, தெலுங்கானா மாநிலம் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவந்துள்ளதாகவும், இனி அம்மாநிலத்தில் வெளி மாநிலத்தவர் யாரும் மருத்துவம் படிக்க முடியாது என்பது போலவும் தவறான அர்த்தம் கற்பிப்பதாக, உள்ளது.
எனவே, இது உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, நமக்கு சில விவரங்கள் கிடைத்தன.
இதன்படி, தெலுங்கானா மாநிலம் நீட் தேர்வுக்கு எதிராக இத்தகைய சட்டம் எதுவும் இயற்றவில்லை. மாறாக, ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட சூழலில், தெலுங்கானாவில் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில், All India Quota 15% மற்றும் மாநில அதிகாரத்தின் கீழ் வரும் 85% இடங்களில் 15% சீட்டுகள் ஆந்திர மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு வந்தது.
கடந்த 2023ம் ஆண்டு இந்த நடைமுறையை நீக்கிவிட்டு, தெலுங்கானா மாநில அதிகாரத்துக்குக் கீழ் வரும் 85% மருத்துவ சீட்டுகளும் தெலுங்கானா மாணவர்களுக்கே என்று மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலமாக, தெலுங்கானா தவிர்த்து இதர மாநில மாணவர்களுக்கு, 15% சீட்டுகள் மட்டுமே (All India Quota) ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திர மாணவர்களுக்கு சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. இதற்கும், நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதுதொடர்பாக, 2023ம் ஆண்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
The Hindu Link l New Indian Express Link l Live Law Link
தெலுங்கானா மட்டுமல்ல, இந்திய மாநிலங்கள் அனைத்துமே இத்தகைய நடைமுறையை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் பின்பற்றுகின்றன. 85% சீட்டுகள் சொந்த மாநில மாணவர்களுக்கும், 15% சீட்டுகள் All India Quota-வின் கீழ் மற்றவர்களுக்கும் தருகின்றன. இவர்கள் கூறுவது போன்று, எந்த மாநிலமும், 100% சீட்டுகளை தனது மாணவர்களுக்கு ஒதுக்க முடியாது.
மேலும், தற்போது தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார்; சந்திரசேகர ராவ் இல்லை.

எனவே, 2023ம் ஆண்டு வெளியான தெலுங்கானா மாநில மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டத் திருத்த செய்தியை எடுத்து, நீட் தேர்வுடன் தொடர்புபடுத்தி, அதனுடன் சந்திரசேகர ராவ் புகைப்படத்தையும் சேர்த்து, மருத்துவ படிப்புகளுக்கான 100% சீட்டுகளை தெலுங்கானாவே வைத்துக் கொள்ளும் என்று தவறான தகவலை பகிர்ந்து, சமூக வலைதளங்களில் சிலர் குழப்பும் ஏற்படுத்துவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என்று தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியதா?
Written By: Fact Crescendo TeamResult: Misleading
