
‘’எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் உடன் சுனிதா வில்லியம்ஸ் சந்திப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ குழுவுக்கு எலான் மஸ்க் பாராட்டு-அதிபருக்கு நன்றி
விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்துவந்த Space X, நாசா குழுவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
திட்டத்துக்கு முன்னுரிமை அளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை மட்டுமின்றி முன்னணி ஊடகங்கள் பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது உண்மையான புகைப்படம் கிடையாது என்றும், AI முறையில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்தது.
ஆம், குறிப்பிட்ட புகைப்படத்தை உற்று கவனித்தால், அதில் நிற்கும் எலான் மஸ்க் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோரின் தோற்றம் அவர்களது உண்மையான தோற்றத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக உள்ளதை, தெரிந்துகொள்ளலாம். மேலும், இதில் Grok என்ற வாட்டர்மார்க் இடம்பெற்றுள்ளது. இது எலான் மஸ்க் நடத்தும் X சமூக வலைதளத்தின் சார்பாக, AI புகைப்படங்களை தயாரிக்க உதவும் புதிய செயலி ஆகும்.
அடுத்தப்படியாக, எலான் மஸ்க் ஏதேனும் இதுபோன்ற புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளாரா என்று தேடியபோது, இவ்வாறு எதுவும் பகிரவில்லை, என்று தெரியவந்தது. இது மட்டுமின்றி சுனிதா வில்லியம்ஸ், எலான் மஸ்க், டிரம்ப் உள்ளிட்டோர் நேரடியாக, சந்தித்துக் கொண்டதாக, இந்த ஆய்வுக்கட்டுரை வெளியாகும் இந்த நொடி வரையிலும் எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.
இது மட்டுமின்றி, AI புகைப்படங்களை பகுப்பாய்வு செய்யும் Hive Moderation மற்றும் sight engine உள்ளிட்டவற்றின் உதவியுடன் குறிப்பிட்ட புகைப்படம், உண்மையானதல்ல என்பதை உறுதி செய்துள்ளோம்.
இவற்றின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம், AI முறையில் தயாரிக்கப்பட்ட ஒன்றுதான், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் உடன் சுனிதா வில்லியம்ஸ் சந்திப்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
