துணிவை துரத்தி அடித்த விஜய் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டதா?

சமூக ஊடகம் சினிமா தமிழ்நாடு

துணிவை துரத்தி அடித்த விஜய் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் விஜய் மற்றும் அஜித் படத்தை வைத்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “துணிவை துரத்தி அடித்த விஜய்… பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இந்நிலையில் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகும் நிலையில் அனைத்து இடங்களிலும் வாரிசு தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, தொடர்ந்து வாரிசு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது,இந்த பொங்கல் ரேசில் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை Online Thalapathy Fans Club – OTFC என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி 17ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2023 பொங்கல் பண்டிகையின் போது நடிகர் விஜய் மற்றும் அஜித் நடிப்பில் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களில் எது டாப் வெற்றி என்று இரு தரப்பு ரசிகர்களும் போட்டிப் போட்டுக்கொள்கின்றனர். இந்த நிலையில் தந்தி டிவி வெளியிட்டதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மைதானா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

முதலில் தந்தி டிவி ஜனவரி 17, 2023 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். 17ம் தேதி இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் தந்தி டிவி வெளியிடவில்லை. எனவே, தந்தி டி.வி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.

இதே போன்று மற்றொரு நியூஸ் கார்டையும் விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். கலாட்டா என்ற இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்த முறையும் விஜய் கைகளே ஓங்கி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று அந்த ஊடகம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுகள் போலியானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

துணிவை துரத்தி அடித்த விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று தந்தி டிவி உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:துணிவை துரத்தி அடித்த விஜய் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply