‘மெலிசா’ சூறாவளியின் மையப் பகுதி என்று பரவும் வீடியோ இதுவா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’மெலிசா சூறாவளியின் மையப் பகுதி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ மேற்கிந்திய தீவுகள் ஜமைக்கா நாட்டுக்கு அருகே நிலைகொண்டு உள்ள ‘மெலிசா’ என்ற சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று வீடியோ எடுத்த அமெரிக்க விமானப்படை வீரர்கள்!

மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுழலும் இந்த புயல், ஜமைக்கா, ஹைதி, டோமினிகன் குடியரசு ஆகிய நாடுகளை புரட்டிப் போட்டு வருகிறது 😳😳😳,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1  l Claim Link 2      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோ AI முறையில் தயாரிக்கப்பட்டது, என்று தெரியவந்தது. 

Earth impacts என்ற பெயரில் செயல்படும் Tik Tok மற்றும் Instagram பக்கங்களில் இந்த வீடியோ ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது. மேலும், இது AI முறையில் தயாரிக்கப்பட்டதாக, Caption பகுதியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். 

அதேசமயம், அமெரிக்க விமானப்படை வீரர்கள் ‘மெலிசா‘ சூறாவளிக்கு அருகே சென்று, அதன் மையப் பகுதியை வீடியோ எடுத்தது உண்மைதான். அந்த வீடியோவுக்கும், நாம் ஆய்வு செய்யும் வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

ABC News l Media Magik Entertainment l MLive

எனவே, AI முறையில் தயாரிக்கப்பட்ட வீடியோவை எடுத்து, ‘மெலிசா’ சூறாவளியின் மையப் பகுதி என்று கூறி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘மெலிசா’ சூறாவளியின் மையப் பகுதி என்று பரவும் வீடியோ இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply