‘மோடியின் திருமண புகைப்படம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’மோடியின் திருமண புகைப்படம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ கிடைச்சிடுச்சு மோடி யின் திருமண ஃபோட்டோ . எனக்கு திருமணமே ஆகலைன்னு பொய்யை சொன்னவன் தானே மோடி . தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் திருமணத்தையே மறைத்தவன் மோடி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி பற்றி, நாம் தகவல் தேடியபோது, இதற்கும், மோடியின் திருமணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. 

ஆம், குறிப்பிட்ட புகைப்படம் பற்றிய வதந்தி கடந்த பல ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக, கடந்த 2014ம் ஆண்டே குஜராத் மாநில பாஜக., மூத்த நிர்வாகி Keyur Hemant Chapatwalaa ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்திருந்தார். 

இந்த பதிவில், ‘’ இந்த புகைப்படம் பற்றியும், மோடி ஜி பற்றியும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகிறது. இது கடந்த 1994ம் ஆண்டு எனது சகோதரி Alpa-ன் திருமணத்தில் மோடி பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்,’’ என்று Keyur குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலமாக, குறிப்பிட்ட புகைப்படம் மோடியின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டதல்ல என்று நமக்கு தெளிவாகிறது. மேலும், அந்த புகைப்படத்தில் உள்ள பெண்ணின் சகோதரர் இதுபற்றி ஏற்கனவே உரிய விளக்கமும் அளித்திருக்கிறார். எனினும், இன்றளவும் இந்த வதந்தி ஓயாமல் பகிரப்படுகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘மோடியின் திருமண புகைப்படம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply