மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் இளமைக் கால புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெல்லி நடனக் கலைஞர் போன்று இருக்கும் இளம் வயது ஸ்மிருதி இராணி புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "எதிரியை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி ஸனாதன வெறிக் கும்பல், எத்தகைய இழிநிலைக்கும் இறங்கும். தமது தாயைக் கொண்டேகூட பழி சுமத்தத் தயங்காது. அப்பேர்ப்பட்ட ஸங்கிகளுக்கு, ஆஃப்ட்ரால் செக்ஸ் நடிகை ஸ்மிருதிராணியைக் கொண்டு

கண்ணியவான் இராகுல்காந்தியின் கண்ணியத்தைச் சீர்குலைக்க முனைவது ஒன்றும் பெரிய காரியமல்ல; இயலாததுமல்ல. எடுத்துத் தொடுத்த ஆயுதங்களத்தனையும் பலவீனமாய் கூர்மழுங்கிப் போய்விட்ட நிலையில், பாலியல் ஆயுதத்தைத்தான் ஆரியர்கள் எடுப்பார்கள். அதன்படியே இப்போது, இராகுல்காந்தியின் அனலின் வீச்சைத் தாள இயலாத ஸங்பரிவார் பிஜேபி,

இந்நாள் எம்பியும், முன்னாள் செக்ஸ் நடிகையுமான ஸ்மிருதி ராணியை ஆயுதமாக்கியுள்ளது. அனைத்து எம்பிக்களும், அவைத்தலைவரும், காவலர்களும், மிக முக்கியமாக கேமராக்களும் நிறைந்துள்ள அவையில், தம்மை நோக்கி 'முத்தங்களைப் பறக்கவிட்டார் இராகுல்' என்று சங்கடமேயில்லாமல் புளுகியுள்ளார் செக்ஸ் நடிகை ஸ்மிருதிராணி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Anbu Mathi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க எந்த நிலைக்கும் இறங்கும் என்று பதிவிட்டு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்தைப் பதிவிட்டுள்ளனர். அதனுடன் அவருடை புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் ஸ்மிருதி இரானியுடையதுதானா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: tripadvisor.com I Archive

படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது tripadvisor.com என்ற இணையதளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தின் உண்மையான வண்ண புகைப்படம் நமக்குக் கிடைத்தது. துருக்கி நினைவுகள் என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த படத்தை எடிட் செய்து ஸ்மிருதி இரானியின் பழைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வைத்திருப்பது தெரிந்தது.

எடிட் செய்த படத்தைவைத்து ஆபாச பட நடிகை என்று விஷமத்தனமாக அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி தவறான தகவல் பகிரப்பட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படம் எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இளமைக் கால புகைப்படம் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆபாசப் பட நடிகை ஸ்மிருதி இரானி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered