‘’ராகுல் காந்தியை தலைகுனிந்து வரவேற்ற உத்தவ் தாக்கரே’’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ காங்கிரசை நடுங்க வைத்த

மராத்திய புலி பாலாசாகேப்

தாக்கரேயின் மகன் உத்தவ்

தாக்கரேயின் பரிதாப நிலை!

Spineless , Shameless, useless leader born for Tiger Balasaheb Thackeray.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Archived Link l Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட படம் உண்மையா என நாம் விவரம் தேடினோம். அப்போது, வெவ்வேறு புகைப்படங்களை எடுத்து, எடிட் செய்து, இவ்வாறு போலியான படம் தயாரித்துள்ளனர், என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக, Shiv Sena UBT அதிகாரப்பூர்வமாக, மறுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

இதுதவிர நமது ஆங்கில மொழிப் பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் கட்டுரையையும் கூடுதல் ஆதாரத்திற்காக, இணைத்துள்ளோம்.

Fact Crescendo English Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படம், எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘ராகுல் காந்தியை தலைகுனிந்து வரவேற்ற உத்தவ் தாக்கரே’ என்று பரவும் படம் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Altered