மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கால் கழுவ பக்கெட் சுமந்தார் என்று புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜவகர்லால் நேரு பக்கெட் சுமந்து செல்வது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மௌண்ட் பேட்டனின் மனைவிக்கு கால் கழுவ பக்கெட்டில் தண்ணீர் கொண்டு போனவன் எல்லாம எஇந்த தேசத்தின் பிரதமர். அப்புறம் எப்படிடா இந்த தேசம் உருப்படும்??" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை விருதை யன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சிறுமைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தற்போது மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினாவுக்கு கால் கழுவத் தண்ணீர் எடுத்துச் சென்றார் என்று பதிவிடப்பட்டுள்ளது. படத்தை பார்க்கும் போதே போட்டோஷாப் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் நேரு மீது உள்ள வன்மத்தின் காரணமாக இதைப் பதிவிட்டிருப்பது தெரிகிறது.

உண்மைப் பதிவைக் காண: alamy.com I Archive

நேரு - எட்வினா இருக்கும் உண்மைப் படத்தைத் தேடினோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, alamy.com என்ற புகைப்படங்கள் விற்பனை செய்யப்படும் இணையதளத்தில் நமக்கு உண்மையான புகைப்படம் கிடைத்தது. அதில், நேருவின் கையில் பக்கெட் எதுவும் இல்லை.

நேரு மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பழைய புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்துள்ளனர். நேரு மீது வெறுப்பை ஏற்படுத்த, அவரைப் பற்றி வதந்தி பரப்பியிருப்பது நம்முடைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மவுண்ட்பேட்டன் மனைவிக்கு பக்கெட் சுமந்த நேரு என்று பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘மவுண்ட்பேட்டன் மனைவிக்கு பக்கெட் சுமந்த நேரு’ என வதந்தி பரப்பும் விஷமிகள்!

Written By: Chendur Pandian

Result: Altered