‘’திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மரணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இறந்துவிட்டதாக, அவ்வப்போது தகவல் பகிரப்படுவது வழக்கம். இதுபற்றி ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் நாம் சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் கூட நடத்தியிருக்கிறோம்.

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே மேலே நாம் கண்ட தகவலும். உண்மையில், கி.வீரமணி கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்பேரில் அவர் இறந்துவிட்டதாக, சிலர் உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்கின்றனர்.

OneIndia Tamil Link

ஆனால், அவர் உடல்நலம் தேறி, தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் கூட ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை பற்றி அறிக்கை கூட வெளியிட்டிருக்கிறார்.

Hindu Tamil Link

இறுதியாக, நாம் திராவிடர் கழகம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ‘’ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நலமுடன் உள்ளார். அவர் மீது வன்மத்துடன் சிலர் அவ்வப்போது இப்படியான வதந்திகளை பரப்புவதை வழக்கமாகச் செய்து வருகின்றனர்,’’ என்று தெரிவித்தனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இறந்துவிட்டதாகப் பரப்பப்படும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer

Result: False