அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பனையூர் :
அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட படம் என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2007ம் ஆண்டு Vinay என்பவர் Flickr இணையதளத்தில் அப்லோட் செய்த புகைப்படம் ஒன்றை எடுத்தே, இவ்வாறு எடிட் செய்து, தற்போதைய தமிழக அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பகிர்கிறார்கள், என்று தெரியவருகிறது. 

நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனித்து வசிக்கிறார். அத்துடன், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியையும் தொடங்கி, பனையூரில் அலுவலகம் நிறுவியுள்ளார். 

Indian Express l Puthiyathalaimurai

இதேபோன்று, பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதால், அவரது மகன் அன்புமணியும் தற்போது பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கியுள்ளார்.

விஜய் மற்றும் அன்புமணியை விமர்சிக்கும் வகையில், பனையூர் என்றாலே அப்பாவால் துரத்தப்பட்டவர்கள் வசிக்கும் இடம் என்ற அர்த்தத்தில் வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர் இவ்வாறு எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, வதந்தி பரப்புகிறார்கள். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: Altered