
‘‘தவெக.,வில் இணைந்த மாதேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஒரு முடிவோடத்தான் இருக்காங்க போல,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது.

இதன்படி, வழக்கறிஞர் சத்ய குமார் என்பவர் சமீபத்தில் தவெக தலைவர் விஜய் முன்பாக, தவெக., கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுதொடர்பாக, அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து, யூ டியுபர் மாதேஷ் தவெக.,வில் இணைந்ததாகக் கூறி வதந்தி பரப்புகிறார்கள்.
கூடுதல் ஆதாரத்திற்காக, தவெக தலைமை அலுவலகத்திலும் பேசி, இது தவறான தகவல், என்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:தவெக.,வில் இணைந்த மாதேஷ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


