கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா?

Coronavirus அரசியல் | Politics தமிழகம்

‘’பாடகி கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். அவரால் அந்த மருத்துவமனை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

இதில், கனிகா கபூர் பற்றி ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். அத்துடன், ‘’கனிகா கபூர் சிகிச்சை பெற்றதால் வொக்கார்ட் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பரவி மருத்துவமனையை மூடும் நிலை ஏற்பட்டுவிட்டது,’’ என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். முதலில், கனிகா கபூர் எங்கே சிகிச்சை பெற்றார் என்ற விவரம் கிடைத்தது. 

இதன்படி, அவரது சொந்த ஊர் லக்னோ என்பதால், அங்கே உள்ள சஞ்சய் காந்தி (SGPGIMS – Lucknow) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றிருக்கிறார். இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

IndiaToday News Link Archived Link 
NDTV Link Archived Link 

இது மட்டுமல்ல, குறிப்பிட்ட லக்னோ மருத்துவமனையில் தனக்கு சரியான பராமரிப்பு செய்துதரப்படவில்லை எனக் குற்றம்சாட்டி கனிகா கபூர் சர்ச்சை கிளப்பியிருந்தார். இதற்கு, அந்த மருத்துவமனையும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுபற்றிய செய்திகளும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

Economictimes Link Livemint Link 

எனவே, கனிகா கபூர் ஆரம்பம் முதலாகவே சிகிச்சை பெற்றது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில்தான் என்று தெளிவாகிறது. அவர் மும்பையில் ஒரே நாள் தங்கியிருந்துவிட்டு உடனடியாக லக்னோ சென்றதே இந்த பிரச்னைக்கு காரணம். அவர் மும்பையில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறவில்லை.

இதனால், மும்பை வொக்கார்ட் மருத்துவமனையில் கனிகா கபூர் சிகிச்சை பெற்றதால்தான் மருத்துவமனை ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியது என்று கூறப்படும் தகவல் தவறானதாகும். pjk

எப்படி தங்களது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது, எதனால் மருத்துவமனையை மூட நேரிட்டது என்று, வொக்கார்ட் மருத்துவமனையின் தலைவர் ஹபில் கோரகிவாலா, தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு தெளிவாக பேட்டி அளித்துள்ளார்.

Economictimes LinkNDTV Link TOI Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இரண்டு வெவ்வேறு சம்பவங்களை தொடர்புபடுத்தி, கனிகா கபூரை மையமாக வைத்து தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று உறுதியாகிறது.

கொரோனா வைரஸ் பற்றி பலவிதமான வதந்திகள் பரவி வரும் சூழலில், இவற்றை பற்றிய உண்மைத்தன்மை அறிய நீங்கள் விரும்பினால் +91 9049046809 என்ற எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவலில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False