FACT CHECK: அமித் ஷாவுக்கு முத்தமிட்ட மோடி? – விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி முத்தமிட்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பொது இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உதட்டோடு உதடு பிரதமர் மோடி முத்தமிடுவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Gays அமுதன் இளமாறன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Unofficial:பிஜேபி தொண்டர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஆகஸ்ட் 13ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதற்கு லைக்ஸ் கொடுத்துள்ளனர். நிறைய ஷேர் செய்யப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லன்களாக வரும் அமுதன், இளமாறனை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளனர். பொது இடத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடுவது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. பார்க்கும் போது உண்மையானது போல தெரிகிறது. இருப்பினும் இருவருக்கும் அமித்ஷா கழுத்தில் அணிந்திருக்கும் சிவப்பு நிற பட்டையில் ஏதோ வித்தியாசம் இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் இது எடிட் செய்யப்பட்ட படமாக இருக்கலாம் என்பது தெரிந்தது. எனவே, இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. அசல் புகைப்படம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி எடுக்கப்பட்டிருந்தது. 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தன்னுடைய வாக்கை பதிவு செய்வதற்காக அகமதாபாத் வந்த பிரதமர், அமித்ஷாவின் பேத்தியின் கண்ணத்தில் முத்தமிட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. அமித்ஷாவின் பேத்தியின் புகைப்படத்தை போட்டோ எடிட் முறையில் அகற்றிவிட்டு, பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு முத்தம் தரும்வகையில் மார்ஃபிங் செய்திருப்பது உறுதியானது.

இதன் மூலம் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி முத்தமிட்டார் என்று பகிரப்படும் படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி முத்தமிட்டார் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அமித் ஷாவுக்கு முத்தமிட்ட மோடி? – விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply