FactCheck: மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி கூறினாரா?

அரசியல் சமூகம் தமிழ்நாடு

‘’மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி குற்றச்சாட்டு,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) நமக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
மதன் ரவிச்சந்திரன் என்பவர் தொடர்ச்சியாக பாஜக., நிர்வாகிகள் மீது பாலியல் புகார் சுமத்துவதோடு, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வரும் சூழலில், இதுபற்றி பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் பகிரப்பட்டு வருகின்றன.

நாமும் இதுபற்றி ஏற்கனவே சில தகவல்களை ஆய்வு செய்து, செய்தியாக வெளியிட்டிருக்கிறோம்.

Fact Crescendo Tamil Link

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் இதுவும். இதுபற்றி புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்தியுள்ளோம். இவ்வாறான செய்தி எதுவும் புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை. 

எனவே, இது புதிய தலைமுறை டெம்ப்ளேட் பயன்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு வதந்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply