எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை தங்களது பதவியை ராஜினாமா செய்கிறார்களா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு வெவ்வேறு செய்திகள் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ அதிமுக பொதுச் செயலாளர் EPS ராஜினாமா செய்கிறார்,‘’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதேபோன்று மற்றொரு செய்தியும் புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்படுகிறது. அதற்கு, ‘அண்ணாமலை ராஜினாமா செய்கிறார்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, இரண்டு கட்சியினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். 

இதனால், பல்வேறு வதந்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. நாமும் அவை பற்றி அவ்வப்போது ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம். 

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

இந்த வரிசையில் பகிரப்படும் வதந்திதான் மேலே நாம் கண்ட இரண்டு செய்திகளும். இவ்வாறு புதிய தலைமுறை எந்த செய்தியும் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் அவர்களது ஆசிரியர் குழுவினரிடம் பேசி உறுதி செய்துள்ளோம். 

கூடுதல் ஆதாரத்திற்காக, அதிமுக மற்றும் பாஜக ஐ.டி., பிரிவு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இரண்டு செய்திகளுமே போலியானவை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை தங்களது பதவியை ராஜினாமா செய்கிறார்களா?

Written By: Fact Crescendo Team 

Result: False