
‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பங்க் உரிமையாளர்களுக்கு பாதிப்பு என்று கூறிய அண்ணாமலை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், நாமும் இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடியபோது, பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
Screenshot: various FB posts with similar caption
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலில், அண்ணாமலை புகைப்படத்தை இணைத்து, அதன் அருகே, ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கவில்லை, பெட்ரோல் பங் உரிமையாளர்களுக்கு தான் பாதிப்பு – அண்ணாமலை, பாஜக,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில், அவர் எங்கேனும் இப்படி பேசியுள்ளாரா என தகவல் தேடினோம். இதன்போது கடந்த டிசம்பர் 21, 2020 அன்று ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பில்லை; மத்திய அரசுக்கு வருமானம் வேண்டும் என்ற காரணத்தினால்தான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது,’’ என அவர் பேசியுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்திகளின் லிங்க் நமக்கு கிடைத்தது.
இதே செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அவர் தமிழ்நாடு அரசு பற்றியும் விமர்சித்திருக்கிறார். அதனையும் சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
இதுபற்றி அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வீடியோ காட்சியும் மற்ற ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி லிங்கும் கீழே தரப்பட்டுள்ளது.
மேற்கண்ட வீடியோவின் 1.28 நிமிடத்தில் இருந்து அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி பேசுவதைக் காணலாம். பங்க் உரிமையாளர்களுக்குத்தான் பாதிப்பு என்று அவர் பேசவே இல்லை. அப்படி பேசியிருந்தால், ஊடகச் செய்திகளில் அதனை மேற்கோள் காட்டியிருப்பார்கள்.
இதன்படி, அவரது பேச்சை தவறாக புரிந்துகொண்டு, உண்மையுடன் பொய்யான செய்தியை சேர்த்து சமூக வலைதளங்களில் சிலர் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில், உண்மையுடன், பொய்யும் சேர்த்து பகிர்ந்துள்ளனர் என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பங்க் உரிமையாளர்களுக்கு பாதிப்பு என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
