
‘‘அரசியலில் இருந்து விலகிய அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அறிவாலயத்தின் செங்கலை பிரிப்பேன் என்று சொன்னவர் தேர்தல் பொறுப்புகளில் இருந்தே விலகினார்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை உள்ளதால், தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கூறிவிட்டு விலகி விட்டேன் என்றுதான் அண்ணாமலை கூறியதாக, தெரியவந்தது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Polimer News l Dailythanthi l Vikatan l Puthiyathalaimurai
அதேசமயம், நிரந்தரமாக அரசியலில் இருந்து விலகுவதாக, அண்ணாமலை கூறவே இல்லை. ஆனால், அவர் விலகுவதாகக் கூறியதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவும் சூழலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அண்ணாமலை பற்றி பகிரப்படும் தகவல் பொய்யானது, என்று அவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் பாஜக ஐடி பிரிவிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:அரசியலில் இருந்து விலகிய அண்ணாமலை என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Missing Context


