இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது காலமானார் என்று பரவும் வதந்தி!

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அப்துல் ஹமீது காலமானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அப்துல் ஹமீது மறைந்துவிட்டதாக அவரது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இது போன்ற கண்ணீர் அஞ்சலி, காலமானார் அறிவிப்பு பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றிப் புகழ்பெற்றவர் அப்துல் ஹமீது. இவர் மறைந்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நான் நலமுடன் இருக்கிறேன் என்று அப்துல் ஹமீது அறிவித்த பிறகும் கூட பலரும் இப்படிப்பட்ட பதிவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அல்லது ஏற்கனவே போட்ட பதிவை அகற்றாமல் உள்ளனர். எனவே, அவர் நலமுடன் உள்ளார் என்பதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம்.

அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில் அவர் 2024 ஜூன் 24ம் அன்று வெளியிட்டிருந்த வீடியோவை காண முடிந்தது. “நான் இறக்கவில்லை…. எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகே பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது.” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். வீடியோவிலும் தான் நலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Archive

இவரது இந்த வீடியோவை வைத்து ஊடகங்களிலும் அப்துல் ஹமீது நலமாக உள்ளார் என்று வெளியான செய்திகளைக் காண முடிந்தது. இவை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்ய போதுமானதாக உள்ளது. இதன் அடிப்படையில் அப்துல் ஹமீது இறந்துவிட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அப்துல் ஹமீது 2024 ஜூன் 24ம் தேதி காலமானார் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. நான் நலமாக இருக்கிறேன் என்று அப்துல் ஹமீது வீடியோ வெளியிட்டுள்ளார். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது காலமானார் என்று பரவும் வதந்தி!

Written By: Chendur Pandian 

Result: False