பாஜக உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி என்று கூறி பகிரப்படும் வதந்தி…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பூர்வஜோன் கீ விராசாத் திட்டத்தின் கீழ் மூதாதையரின் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு கடன் – பாஜக உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் போஸ்டர் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இந்த போஸ்டரை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த சூழலில், மேற்கண்ட போஸ்டர் பாஜக.,வின் உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி எனக் கூறி பகிர்ந்துள்ளனர். உண்மையில், இந்த போஸ்டரை பாஜக வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களின் தகவல் தொழில்நுட்பக் குழுவினரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இந்த போஸ்டர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது, பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கேலி செய்யும் வகையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போலியான தேர்தல் அறிக்கைகளை பாஜக பெயரில் உருவாக்கி, சமூக வலைதளங்களின் மூலமாகப் பரப்பினர். அதில் ஒரு போஸ்டர்தான் மேற்கண்ட போஸ்டர்.

Archived Link

இந்த பழைய ஃபேக் போஸ்டரை எடுத்து, மீண்டும் எடிட் செய்து, அண்ணாமலை, ஜே.பி.நட்டா புகைப்படத்தை சேர்த்து புதியதுபோல, உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.    

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பாஜக உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி என்று கூறி பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False