இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பப்புவின் பாட்டி நாடான இத்தாலியில் மோடிஜி எப்படி  வரவேற்கப்பட்டார் என்பதை பாருங்கள். 🇮🇳🇮🇳*

*சைக்கோபான்ட்கள் இதை பார்க்க வேண்டாம், ஏனென்றால் உங்களால் இதை ஜீரணிக்க முடியாது 😊😇*😡😡😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

சமீபத்தில் பிரதமர் மோடி இத்தாலி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

இதன்போது அவரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டன. அதேசமயம், பாஜக ஆதரவாளர்கள், மோடியின் இத்தாலி சுற்றுப்பயணத்தை ஆதரித்தும் பதிவிட்டனர்.

இதன் ஒரு பகுதியாகவே மோடி ஆதரவாளர்கள் மேற்கண்ட வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். 

அப்போது, இது கடந்த 2023ம் ஆண்டு மோடி ஆஸ்திரேலியா சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பதற்கான ஆதாரம் நமக்குக் கிடைத்தது. 

மோடியின் அதிகாரப்பூர்வ யூ டியுப் பக்கத்தில் இதுதொடர்பான வீடியோ நிறைய காண கிடைக்கின்றன. முழு வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

மற்றொரு வீடியோவும் ஆதாரத்திற்காகக் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சிட்னி நகரில் உள்ள Qudos Bank Arena என்ற இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Norman Albanese பேசுவதையும் காண முடிகிறது.  

இதேபோன்று, ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Norman Albanese அதிகாரப்பூர்வ யூ டியுப் பக்கத்திலும், குறித்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ பகிரப்பட்டுள்ளது. 

எனவே, 2023ம் ஆண்டு மோடி ஆஸ்திரேலியா சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது பகிர்ந்து, மோடியின் இத்தாலி சுற்றுப் பயண வரவேற்பு காட்சி என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING

Leave a Reply