குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

பாலிமர் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்! தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான்; சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும்! – ஆளுநர் ரவி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடாபாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் என அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் சாராய விற்பனைக்கு காரணம் சிறு தெய்வ வழிபாடுதான் என்று கூறி அதை நிறுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்க்கும் போதே இது போலியானது என்று தெரிந்தாலும் ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு கருத்தை ஆளுநர் வெளியிட்டாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அவர் கருத்து எதையும் வெளியிடவில்லை என்பது தெரிந்தது. ஆளுநரிடம் புகார் அளிக்கச் சென்ற பாஜக நிர்வாகிகளிடம் ஆளுநர் ஏதேனும் தெரிவித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். தமிழிசை அளித்த பேட்டியில் ஆளுநர் எதையும் கூறியுதாக குறிப்பிடவில்லை.

சரி இந்த நியூஸ் கார்டை பாலிமர் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகம், இணையதள பக்கங்களை பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு பதிவும் கிடைக்கவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை பாலிமர் டிவி ஆசிரியர் குழுவுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினோம். அவர்களும் இது போலியானது என்று உறுதி செய்தனர். 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சாராய சாவுகளுக்கு காரணமான சிறு தெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறினாரா?

Written By: Chendur Pandian 

Result: False

Leave a Reply