‘குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்’ என்று பகிரப்படும் தவறான வீடியோ…

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்…’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Link l Archived Link 

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

இந்த வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை எடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது குஜராத்தில் நிகழ்ந்த சம்பவம் இல்லை என்றும், பீகார் மாநிலத்தில் நிகழ்ந்த குடும்பத் தகராறு ஒன்று தொடர்பானது என்றும் விவரம் கிடைத்தது. 

Timesofindia link l apnlive link l indiatoday link 

இதன்படி, பீகார் மாநிலத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை அவரது பிறந்த வீட்டைச் சேர்ந்த நபர்கள் இவ்வாறு தங்களது வீட்டிற்குக் கடத்திச் சென்றதாக, தெரியவருகிறது. 

எனவே, தவறான வீடியோ ஒன்றை எடுத்து, இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்’ என்று பகிரப்படும் தவறான வீடியோ…

Written By: Fact Crescendo Team 

Result: False