‘’ மணிப்பூரில் கிறிஸ்தவ பெண் கொடூரமாகக் கொலை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Archived Link

உண்மை அறிவோம்:

இந்த வீடியோ ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாக, மலேசியாவில் இந்தியப் பெண் அடித்துக் கொலை என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒன்றாகும்.

அப்போதே நாம் இதுபற்றி ஆய்வு செய்து, கட்டுரை ஒன்றையும் வெளியிட்டோம். அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Fact Crescendo Tamil Link

அதே வீடியோவை தற்போது தலைப்பு மட்டும் மாற்றி மணிப்பூர் கலவரத்துடன் தொடர்புபடுத்தி சிலர் வதந்தி பரப்புகின்றனர்.

Documentingreality link

உண்மையில் இந்த வீடியோ பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்டதாகும். Thalia Torres de Souza எனும் பெயரைக் கொண்ட பெண்ணை, பிரேசில் கடத்தல் குழு ஒன்று கடத்திச் சென்று இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்து, அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதனையே மீண்டும் மீண்டும் புதுப்புது வதந்திகளை சேர்த்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:Rapid FactCheck: மணிப்பூரில் கிறிஸ்தவ பெண் கொடூரமாகக் கொலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False