நேரடியாக மூளையைத் தாக்கும் கொரோனா… மரணம் நிச்சயம் என்று பரவும் செய்தி உண்மையா?

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்கும் என்று ஒரு தகவல் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Youtube “நேரடியாக மூளையைத் தாக்கும் புதிய வகை கொரோனா..! சிக்கினால் கண்டிப்பா மரணம் தான்” என்று வீடியோ ஒன்று யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சீனாவில் பரவி வரும் BA.5 வகை கொரோனா பற்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு […]

Continue Reading

FACT CHECK: ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே திரைப்படம் வந்ததா?

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே படம் வந்துவிட்டது என்றும், திட்டமிட்டபடி கொரோனா வைரஸ் பரவல் நடந்து வருகிறது என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “The omicron Variant” என்ற திரைப்படம் ஒன்றின் போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த நாகரீக வாழ்வே.. அவன் கட்டமைத்த நாடக மேடையில் தான்.. அதில் இருந்துகொண்டு நம்மை நாம் உணரமுடியாது..எல்லாமே […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வேரியண்ட் வெளிப்படும் காலம் தொடர்பான அட்டவணையை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளதா?

புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா எப்போது வெளியாகும், அதன் அறிவியல் பெயர் என்ன என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் ரகசியமாக பட்டியல் தயாரித்து வைத்திருந்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜான்ஸ் ஹாப்கின்ஸ், வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் லோகோவோடு கூடிய பட்டியலை யாரோ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அதை […]

Continue Reading

FACT CHECK: புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

புதிய வகை கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு சற்றுமுன் வந்த தகவல் புதிய வகை.!! கொரோனா பரவலால் […]

Continue Reading

FACT CHECK: 101 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ளூ பெருந்தொற்று காலத்தில் எடுத்த படங்களா இவை?

தற்போது கொரோனா பரவல் சூழலைப் போன்று 101 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ – சுகாதார சூழல் இருந்ததாகவும் எப்போது எடுக்கப்பட்ட படம் என்றும் சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விதவிதமான மாஸ்க் அணிந்திருப்பது, ஆம்புலன்ஸ், மருத்துவமனைகள் போன்றவற்றின் பழங்கால படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “101 ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்ற ஒரு கால சூழ்நிலையில் […]

Continue Reading

FactCheck: கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் செவிலியர் உயிரிழந்தாரா?- உண்மை இதோ!

‘’கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற செவிலியர் டிவியில் பேசிக் கொண்டிருந்தபோதே துடிதுடித்து இறந்துபோனார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Video Link இதில், ‘’பெண் ஒருவருக்கு, கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக போடுகிறார்கள்; சிறிது நேரத்தில் அந்த பெண் பேசியபடியே மயங்கி விழுகிறார். அவர் இறந்துவிட்டார்,’’ என்று குறிப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது […]

Continue Reading