‘’கட்டுனா கவுண்டச்சி.. இல்லைனா பூசணிக்காய்’’ என்று கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் எழுதி வைத்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3

இந்த புகைப்படத்தில், ’’கட்டுனா கவுண்டச்சி... இல்லைனா.. இருக்கவே இருக்கு.. பூசணிக்காய்‘’, என்று இருசக்கர வாகனம் ஒன்றில் எழுதப்பட்டுள்ளது.


கவுண்டர் சாதியை வேண்டுமென்றே கேலி செய்து, சீண்டும் வகையில் இந்த பதிவு உள்ளது.


பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.


உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் மேலோட்டமாக பார்க்க உண்மையானது போன்று இருந்தாலும், அதில் உள்ள எழுத்துகள் சற்று ஃபான்ட் மற்றும் கலர் வேறுபாட்டுடன் உள்ளதை தெளிவாக, காண முடிகிறது. குறிப்பாக, பூசணிக்காய் என்ற வார்த்தை மட்டும் எடிட் செய்து, சேர்க்கப்பட்டது போல உள்ளது.


எனவே, இந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த சில ஆண்டுகளாகவே இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் ஒன்று என்பதற்கான ஆதாரம் கிடைத்தது.


உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். Reddit Link


இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   கட்டுனா கவுண்டச்சி.. இல்லைனா பூசணிக்காய் – வைரல் புகைப்படம்.
Claimed By :  Social Media User
Fact Check :  ALTERED