‘’பொது இடத்தில் பெண் மீது கை வைத்து தடவும் முஸ்லீம் நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ஹிஜாபும்,புர்காவும் பெண்களை சாதாரண ஆண்களிடமிருந்து பாதுகாக்கிறது.ஆனால் முஸ்லிம் ஆண்களிடமிருந்து அல்ல...,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனுடன், முஸ்லீம் முதியவர் ஒருவர், புர்கா அணிந்த பெண்ணின் பின்புறத்தை தடவுவது போன்ற காட்சிகளுடன் கூடிய வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.



Claim Link 1 I Claim Link 2 I Claim Link 3 | Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி இந்தி போன்ற மொழிகளிலும் இந்த வீடியோ பகிரப்படுகிறது.


உண்மை அறிவோம்:

நாம் மேற்கண்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். இந்த வீடியோவில் வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.


இதன் ஃபிரேம் ஒன்றை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி தகவல் தேட தொடங்கினோம். அப்போது, இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.


Azizul 2.0 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 05, 2024 அன்று இந்த வீடியோ முதலில் பகிரப்பட்டுள்ளது.

அதே இடம், அதே காஸ்ட்யூம், அதே நபர்கள் தோன்றும் மற்றொரு வீடியோவும், அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கிடைத்தது.

மேலும், குறிப்பிட்ட வீடியோ போன்று, அதே வயதான நபர் மற்றும் புர்கா அணிந்த பெண் இடம்பெற்ற இன்னும் சில வீடியோக்கள் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ளதையும் கண்டோம்.


அத்துடன், Azizul 2.0 தனது சுய விவரத்தில் Broadcast Channel என்றே குறிப்பிட்டுள்ளார்.


இதன்மூலமாக, நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட, சித்தரிக்கப்பட்ட வீடியோவை, உண்மை என நம்பி முஸ்லீம் மக்கள் குறித்து வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   பொது இடத்தில் பெண் மீது கை வைத்து தடவும் முஸ்லீம் நபர்!
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE