FactCheck: சோனியா காந்தியின் புத்தக அலமாரியில் இந்தியாவை கிறிஸ்தவ மத மாற்றம் செய்வது பற்றிய புத்தகம் இருந்ததா?

அரசியல் | Politics இந்தியா | India தமிழ்நாடு | Tamilnadu

‘’சோனியா காந்தியின் வீட்டு புத்தக அலமாரியில், இந்தியாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றக்கூடிய புத்தகம் உள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

மேற்கண்ட புகைப்படத்தில் சோனியா காந்தியின் பின்னே, ஒரு புத்தக அலமாரி உள்ளது. அதில், How to convert India into Christian nation என்ற தலைப்பில் ஒரு புத்தகம் உள்ளதைக் காண முடிகிறது. அதற்கு அருகில் கீழே இயேசுவின் சிலை போன்ற ஒன்றும் காணப்படுகிறது.

இந்த புகைப்படத்தை வாசகர்கள் சிலர், நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடினோம். அப்போது, பலரும் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று எனவும், சோனியா காந்தி அத்தகைய புத்தகம் எதையும் வைத்திருக்கவில்லை எனவும் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கீழேயே சிலர் கமெண்ட் பகிர்ந்துள்ளதைக் கண்டோம்.

இதன் உண்மையான புகைப்படம், பல்வேறு ஊடகங்களிலும் ஏற்கனவே பகிரப்பட்ட ஒன்றுதான்.

Hindustan Times Link I Livemint Link

குறிப்பிட்ட புகைப்படத்தை, பிடிஐ செய்தி நிறுவனம் முதலில் வெளியிட்டிருக்கிறது. அதனையே மற்ற ஊடகங்களும் பகிர்ந்து வர, சிலர் அதனை எடுத்து, எடிட் செய்து, சோனியா காந்தி கிறிஸ்தவ மத மாற்றத்தை ஊக்குவிப்பதாகக் கூறி வதந்தி பரப்பி வருகின்றனர்.

எனவே, பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து, அதில், இயேசு உருவம் மற்றும் கிறிஸ்தவ மத மாற்றம் தொடர்பான புத்தகம் ஒன்றின் பெயரை எடிட் செய்து சேர்த்து, வதந்தி பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

இறுதியாக, இவர்கள் குறிப்பிடுவதைப் போல How to convert India into Christian nation அப்படி ஏதேனும் புத்தகம் உண்மையில் உள்ளதா, என்று தகவல் தேடினோம். ஆனால், ஈ-புக் தளங்கள் அல்லது புத்தக விற்பனை தளங்கள் என எதிலும் அந்த பெயரில் புத்தகம் இல்லை என்றே தகவல் கிடைத்தது. அதேசமயம், இந்தியாவில் கிறிஸ்தவ மதம் உள்ளிட்ட வெவ்வேறு தலைப்புகளில் நிறைய புத்தகங்கள் காண கிடைத்தன.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சோனியா காந்தியின் புத்தக அலமாரியில் இந்தியாவை கிறிஸ்தவ மத மாற்றம் செய்வது பற்றிய புத்தகம் இருந்ததா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered