‘’ ராகுல் காந்தி உடன் நிற்கும் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தவள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இவள்தான் குல்விந்தர் கவுர்!!! இவள்தான் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தவள்..

இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று!!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரனாவத் கடந்த ஜூன் 6, 2024 அன்று சண்டிகார் விமான நிலையம் சென்றபோது அங்கு பணியில் இருந்த CISF Constable குல்விந்தர் கவுர், கங்கனாவின் முகத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது.

Fact Crescendo Tamil Link

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் கங்கனாவை கிண்டல் செய்தும், அதேசமயம் அவருக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய தகவலும்…

ஆம், ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டுத்தான் குல்விந்தர் இதுபோன்று கங்கனாவை தாக்கினார், என்று பாஜக ஆதரவாளர்கள் தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.

உண்மையில், இந்த புகைப்படத்தில் ராகுல் காந்தியுடன் நிற்பவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி Divya Mahipal Maderna என்பவர் ஆவார்.

இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். கடந்த பிப்ரவரி 14, 2024 அன்று திவ்யா தனது Instagram பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தை எடுத்தே, இவ்வாறு பாஜக ஆதரவாளர்கள் தவறான தகவல் பரப்புகின்றனர்.

இதுதொடர்பாக, திவ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாஜக ஐடி பிரிவை குற்றம்சாட்டி, அவரது X வலைதள பக்கத்தில் விளக்கமும் அளித்துள்ளார்.

எனவே, தவறான புகைப்படத்தை எடுத்து, கங்கனாவை தாக்கிய குல்விந்தர் கவுர், ராகுல் காந்தியுடன் நெருக்கமாக நிற்கும் காட்சி என்று கூறி வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘ராகுல் காந்தியுடன் நிற்கும் குல்விந்தர் கவுர்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False