‘’இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் - அரிய புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நேரு, இந்திரா

யூனாஸ் கான் (இந்திராவின் மாமனார்) ஃபிரோஸ் கான் (இந்திராவின் கணவர்)

மிகவும் அரிதான படம், தயவுசெய்து உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். முதலில், இந்த படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவு கிடைத்தது.

அந்த பதிவிலும் ‘நேரு, இந்திரா காந்தி, அவரது கணவர் பெரோஸ் கான், மாமனார் யூனஸ் கான்’ என்றே குறிப்பிட்டிருந்தனர்.

Aicc Facebook Post

இதன்மூலமாக, கடந்த பல ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்த தகவல் பகிரப்படுவதாக, உணர்ந்தோம்.

உண்மையில், மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்க்ள் யாரும், இந்திரா கணவர் பெரோஸ் காந்தியின் உருவத்துடன் ஒத்துப் போகவில்லை.

இந்த படத்தில் இருப்பவர்களில் நேரு, இந்திரா தவிர்த்து, இடது ஓரம் நிற்கும் இளம் வயது ஆண் Mohammad Yunus Khan. இவர், ‘எல்லை காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட Khan Abdul Gaffar Khan என்பவரது மைத்துனர் ஆவார். தவிர, சுதந்திர போராட்டங்களிலும் பங்கேற்றுள்ள யூனுஸ் கான், இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்திய தூதரக அதிகாரியாக துருக்கி, இந்தோனேஷியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இவர் உயிரிழந்தார்.

Wikipedia Link

அதேபோல, வயதான தோற்றத்தில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் ரஷ்யாவைச் சேர்ந்த Nicholas Roerich ஆவார். எழுத்தாளர், தத்துவஞானி, ஓவியர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறன் கொண்டவராக அறியப்படுகிறார். ரஷ்யாவில் பிறந்த இவர், அரசியல் காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேறி, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்துவிட்டு, தனது இறுதிக்காலத்தில், இந்தியாவில் குடியேறி, குலு பகுதியில் வாழ்ந்து, மறைந்தார்.

Nicholas Roerich மனைவி Elena Roerich (Helena Roerich) எழுதியுள்ள புத்தகத்தில் நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் ‘1942ம் ஆண்டு நேரு, இந்திரா காந்தி குலுவில் உள்ள Roerich எஸ்டேட்டுக்கு வந்தபோது எடுத்தது,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர அப்போது எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

Elena Roerich Book Link

இது தவிர, பெரோஸ் குடும்பப் பெயர் காந்தி; கான் அல்ல. அவர் ஒரு பார்ஸி. முஸ்லீம் இல்லை.

மேலும், இந்திரா மற்றும் பெரோஸ் திருமணம் பற்றியும், அவர்களது மதம் பற்றியும் ஏற்கனவே பல வதந்திகள் பகிரப்பட்டிருக்கின்றன. அவை பற்றியும் நாம் ஃபேக்ட்செக் செய்திருக்கிறோம். இதோ லிங்க்…

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

எனவே, சம்பந்தமில்லாத புகைப்படம் ஒன்றை எடுத்து, இவர்கள்தான் இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் என்று வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் புகைப்படம் இதுவா?

Written By: Fact Crescendo Team

Result: False