ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்களா? திட்டமிட்டு பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்கள் என்று நேருவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த எம்.ஓ.மத்தாய் புத்தகம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்திய அரசியல் வரலாறு பற்றிய எந்த அடிப்படை புரிதலும் இன்றி இந்து – முஸ்லீம் விரோதத்தை வளர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் வாய்க்கு வந்ததை எல்லாம் உண்மை போல எழுதி, மற்றவர்கள் மனதில் பிரிவினை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.

உண்மையில், ஜவஹர்லால் நேருவிடம் தனிப்பட்ட உதவியாளராக இருந்த எம்.ஓ.மத்தாய் எங்கேயும் இப்படி நேரு பரம்பரை பற்றி எதுவும் எழுதவில்லை. அவர் நேருவை மையப்படுத்தி எழுதிய 2 புத்தகங்களின் லிங்க் தரப்பட்டுள்ளது. இவற்றில் எங்கேயும் அவர் நேரு குடும்பத்தினர் முஸ்லீம் வழிவந்தவர்கள் என்று கூறவில்லை.

Reminiscences of the Nehru Age (1978) I My Days with Nehru (1979)

அத்துடன், இந்திரா காந்திக்கு எப்படி காந்தி என்ற பெயர் வந்தது என்று கூட பலமுறை நாமும் விளக்கம் அளித்திருக்கிறோம். வரலாற்றாசிரியர்கள் பலரும் இதுபற்றி விளக்கமாக புத்தகங்கள் பலவும் எழுதியுள்ளனர். அவற்றைக் கூட படிக்காமல் திரும்ப திரும்ப இந்திராவுக்கு எப்படி காந்தி என்ற பெயர் வந்தது என, விதவிதமான வதந்திகளை பலரும் பரப்புகின்றனர்.

Fact Crescendo Tamil Article Link

இதே வரிசையில் பகிரப்படும் மற்றொரு அடிப்படை ஆதாரமற்ற வதந்திதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும். ஏற்கனவே இதுபோன்ற ஒரு வதந்தி பரவியபோது, நமது ஆங்கிலப் பிரிவு நேருவின் குடும்பப் பின்னணி பற்றி விரிவான ஆய்வு நடத்தி, ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Fact Crescendo English Article Link

மேலும், மத்திய அரசே அதிகாரப்பூர்வமாக, நேரு குடும்பத்தின் 5 தலைமுறையினர் பற்றி இணையதளம் ஒன்றில் தகவல் பகிர்ந்திருக்கிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

Nehru Family Tree – GOI

இதேபோல, மத்திய அரசுப் பணிகளில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதாகவும், அதனால்தான் மோடியால் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த முடியவில்லை எனவும் இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல் போல, ஏற்கனவே ஒருமுறை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் சிறுபான்மையினத்தவர் எவ்வளவு என்பது பற்றி சர்ச்சை எழுந்தது. அப்போது, இதுதொடர்பான ஆர்டிஐ கேள்வி ஒன்றுக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளிக்க முடியாது என்று கூறிவிட்டது.

sabrangindia link

கூடுதல் சந்தேகத்திற்கு, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் எவ்வளவு என்று நீங்களே கூட இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.

PMIndia.Gov.In Link

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில், எந்த ஆதாரமும் இன்றி போகிற போக்கில் இந்து – முஸ்லீம் விரோதத்தை வளர்க்கவும், காங்கிரஸ் – பாஜக மோதலை மையப்படுத்தி நேருவை வேண்டுமென்றே ஒரு குற்றவாளி போல சித்தரிக்கவும் முயற்சித்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்களா? திட்டமிட்டு பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply