அயோத்தி ராமர் கோவிலுக்கு அமெரிக்காவில் உள்ள சங்கம் ஒன்று 12 தங்க வாகனங்களை நன்கொடையாக வழங்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கோவிலில் உள்ள தங்க வாகனங்களின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அமெரிக்காவின் NRI வசவி சங்கம் சார்பில் உத்தர பிரதேசத்தின் அயோத்யா ஸ்ரீ ராமர் கோயிலுக்கு நன்கொடையாக அளித்த 12 தங்க வாகனங்கள்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தி ராமர் கோவிலுக்கு அமெரிக்காவை சார்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 12 தங்க வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில் சிலர் பேசுவதை கேட்க முடிகிறது. அவர்கள் பேசுவது தெலுங்கு போல உள்ளது. வீடியோவில் அந்த தங்க வாகனங்களின் கீழ் அது என்ன வாகனம், யார் நன்கொடையாகக் கொடுத்தார்கள் என்ற விவரம் உள்ளது. "NRI Vaasavi Association (NRIVA), USA 2023" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு 2024ம் ஆண்டில் நடந்த நிலையில், 2023ல் நன்கொடையாகக் கொடுத்ததாகப் பரவும் தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

ராமர் கோவிலுக்கு 12 தங்க வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டதாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் 12 தங்க வாகனம் உள்ளதாக வெளியான வீடியோ செய்திகள் நமக்கு கிடைத்தன.

தெலங்கானா பத்ராசலம் சீதா ராமசந்திரசாமி கோவிலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சார்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் அமைப்பு 12 தங்க வாகனங்களை நன்கொடையாகவும் அதன் மதிப்பு எவ்வளவு என்று தலைப்பிட்டு யூடியூபில் பதிவிடப்பட்டிருந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்றிருந்த தங்க வாகனங்களைக் காண முடிந்தது.

தொடர்ந்து தேடிய போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் கூட இது தொடர்பாக ஃபேக்ட் செக் கட்டுரை வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த அந்த அமைப்பின் கூறியபடி கும்பகோணத்தில் இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட்டு கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில் தங்க வாகனங்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்டது இல்லை, தெலங்கானா ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அயோத்தி ராமர் கோவிலுக்கு அமெரிக்க என்.ஆர்.ஐ-க்கள் வழங்கிய 12 தங்க வாகனங்கள் என்று பரவும் வீடியோ தெலங்கானாவைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தி கோவிலுக்கு நன்கொடையாக வந்த 12 தங்க வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False