‘’பண்ருட்டி – விழுப்புரம் சாலையின் பரிதாப நிலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பண்ருட்டி To விழுப்புரம் சாலை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

மேலும், திமுக ஆட்சியில் சாலைகள் இவ்வாறு தரமின்றி உள்ளதாகக் குறிப்பிட்டு கமெண்ட் பகிர்வதையும் கண்டோம்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். இதில், 2 புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோவை இணைத்து, ‘பண்ருட்டி - விழுப்புரம் சாலை,’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, முதலில் மேலே உள்ள புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்று தகவல் தேடியபோது, இது 2018ம் ஆண்டு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ராஜ்மஹால் சதுக்கத்தில் எடுக்கப்பட்டதாக, விவரம் கிடைத்தது.

News Link

இதேபோன்று மற்றொரு புகைப்படம் பற்றி விவரம் தேடினோம். அப்போது, 2023 நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக, தெரியவந்தது.

News Link

அடுத்ததாக, இவர்கள் பகிர்ந்துள்ள வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று தகவல் தேடினோம். அப்போது, இது சீனாவில் உள்ள சாலை ஒன்றின் வீடியோ என தெரியவந்தது. 2020ம் ஆண்டு முதலாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், இதே இடத்தில் எடுக்கப்பட்ட நிறைய வீடியோக்கள், bilibili எனும் சீன இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன.

bilibili.com link 1 l link 2 l link 3

இதன்படி, 2020ம் ஆண்டு முதலாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் மேற்கண்ட வீடியோவை எடுத்து, அதன் காட்சிகளை Mirror முறையில் வலதுபுறம் உள்ளதை இடதுபுறம் வருவது போல எடிட் செய்து, ‘பண்ருட்டி - விழுப்புரம் சாலை’ என வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.

இறுதியாக, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ FactCheck குழு தரப்பில் இந்த புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக மறுப்பு தெரிவிக்கப்பட்டதையும் கண்டோம். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 2 புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோ என அனைத்தும் வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டவை என்றும், பண்ருட்டி - விழுப்புரம் சாலைக்கும், இதற்கும் தொடர்பில்லை என்றும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பண்ருட்டி – விழுப்புரம் சாலையின் பரிதாப நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False