
‘’த.மா.கா., துணையின்றி ஒரு எம்.பி.,கூட வெற்றி பெற முடியாது,’’ என்று ஜிகே வாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ G.K. வாசன் எச்சரிக்கை ! தமிழ் மாநில காங்கிரஸ் துனையின்றி ஒரு எம்.பி. கூட தமிழ் நாட்டிலிருந்து வெற்றி பெற முயாது!.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் உண்மை என நம்பி, இதனை ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டில், எழுத்துப் பிழை உள்ளது. இதனால், தினமலர் ஊடகம் இதனை வெளியிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

அடுத்தப்படியாக, தினமலர் ஆசிரியர் குழு மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘’இது ஜிகே வாசன் பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்று தெரிவித்தனர்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘த.மா.கா., துணையின்றி ஒரு எம்.பி.,கூட வெற்றி பெற முடியாது’ என்று ஜிகே வாசன் கூறினாரா?
Written By: Fact Crescendo TeamResult: False
