FactCheck: யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியா இது?

அரசியல் | Politics இந்தியா | India தமிழ்நாடு | Tamilnadu

‘’யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இந்த ஃபேஸ்புக் பதிவில்,  உத்தரப் பிரதேசத்தில் 12 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அதனை 48 ஆக உயர்த்தியுள்ளனர், என்று எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த புகைப்பட செய்தியை முதலில் மீடியான் என்ற ஊடகம் வெளியிட்டிருந்தது. ஆனால், இது தவறான தகவல் என்று தெரியவந்ததும் அவர்கள் அந்த பதிவை நீக்கி விட்டனர்.

இதே தகவலை, பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஷேர் செய்திருந்தார். ஆனால், பலரும் அவரை கேலி செய்ததை தொடர்ந்து, அவரும் அகற்றிவிட்டார்.

Tweet Link 1 I Tweet Link 2

ஆம், உண்மையில், இது சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள Dr Kamakshi Memorial Hospital ஆகும். அதன் புகைப்படத்தை எடுத்து, உத்தரப் பிரதேச மருத்துவமனை என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர். உண்மை தெரியவரவும், உடனடியாக, செய்தியை பலரும் அகற்றி வருகின்றனர்.

எனவே, உத்தரப் பிரதேச மருத்துவமனை என்று கூறி, சென்னை மருத்துவமனையின் புகைப்படத்தை எடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியா இது?

Fact Check By: Pankaj Iyer 

Result: False