‘’ சத்தியமே லட்சியமாய் கொள்ளடா – என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்,’’ என்று கூறி, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’
‘கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’
நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே!
வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம்
@AIADMKOfficial
என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.
தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அஇஅதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
“எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா – நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா”
என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட அறிக்கை எந்நேரமும் டெலீட் செய்யப்படக்கூடும் என்பதால், அதன் ஸ்க்ரின்ஷாட்டை ஒவ்வொன்றாகக் கீழே இணைத்துள்ளோம்.
பக்கம் 1…
பக்கம் 2…
பக்கம் 3…
இந்த அறிக்கையில் ‘’ எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா – நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா” என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்,’’ எனும் பகுதி மட்டும் தவறான ஒன்றாகும்.
ஆம், இந்த பாடலுக்கும், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்படும் எம்ஜிஆருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. குறிப்பிட்ட பாடலில் நடித்தவர் ஆர். ரஞ்சன் என்பவர் ஆவார். நீலமலைத் திருடன் என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை எழுதியவர் மருதகாசி. பாடியவர் டி.எம். சௌந்தரராஜன், இசை கே.வி. மஹாதேவன், கதாநாயகி அஞ்சலிதேவி; வில்லன் பி.எஸ்.வீரப்பா.
பாடல் வரிகளை tamilkavinganlyrics என்ற பிளாக்கில் படிக்கலாம்.
முழு படத்தின் லிங்க் இதோ…
இவ்வாறு தவறான தகவலை மேற்கோள் காட்டி, அறிக்கை வெளியிட்டதற்காக, எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்து, திமுக சார்பாக ட்வீட் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, எம்ஜிஆர் படத்தின் பாடல் என்று கூறி எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை பகிர்ந்துள்ளார் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:எம்ஜிஆர் நடித்த பாடல் என்று கூறி தவறான தகவலை பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி…
Fact Check By: Fact Crescendo TeamResult: Insight
