2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழப்பு: பழைய செய்தியால் திடீர் பரபரப்பு

உலக செய்திகள் சமூகம்

‘’2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழந்தார்,’’ என்று கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link 1Archived Link 1
Facebook Link 2Archived Link 2
Facebook Link 3Archived Link 3

ஒரே செய்தியை இந்த 3 ஐடிகளும் பகிர்ந்துள்ளன. உண்மையில், இந்த செய்தி TamilanMedia என்ற இணையதளத்தில் செப்டம்பர் 7, 2019 அன்று வெளியிடப்பட்டதாகும்.

Tamilan Media News LinkArchived Link

இந்த செய்தியில், எமிலி டிட்டெரிங்டன் என்ற இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் 8 வாரங்களாக மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அவரது வீட்டின் கழிவறையில் இறந்து கிடந்தார், எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
முதலில் மேற்கண்ட புகைப்படத்திற்கும், இதில் உள்ள செய்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வயிறு வீங்கிய நிலையில் உள்ள அப்பெண்ணின் புகைப்படம் இணையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வருகிறது. இதற்கான வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதேபோல, அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கப்பட்ட குடலின் புகைப்படமும் இந்த செய்திக்கானது இல்லை. அது 2017ம் ஆண்டில் சீனாவில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பானதாகும்.

ஆம். ஷாங்காயை சேர்ந்த 22 வயது நபர், பிறந்தது முதலே வயிற்றில் கடும் வலியுடன் அவதிப்பட்டு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் 30 இன்ச் நீளமுள்ள 13 கிலோ எடையுடன் கூடிய கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டறிந்தனர். அவர் பிறந்தது முதலே மலக்கழிவுகள் பெருங்குடலில் தங்கியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பேரில், பெருங்குடலின் ஒருபகுதியை டாக்டர்கள் வெட்டி எடுத்தனர். இதுபற்றி 2017ம் ஆண்டிலேயே நிறைய செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

vice.com LinkInverse.com Link Zee News Link

இது மட்டுமல்ல, இவர்கள் குறிப்பிடும் செய்தி இங்கிலாந்தில் நிகழ்ந்த உண்மையான சம்பவம்தான். ஆனால், அது 2015ம் ஆண்டில் நிகழ்ந்ததாகும். இந்த செய்தியும் நிறைய ஊடகங்களில் அப்போதே வெளியாகியுள்ளது. ஆனாலும், இதுதொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

Womenshealthmag.com Link Independent.co.uk Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேலே உள்ள செய்திக்கும், அதில் இடம்பெற்றுள்ள புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
2) மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தி இங்கிலாந்தில் 2015ம் ஆண்டு நிகழ்ந்ததாகும். தற்போது அல்ல.
3) அதேபோல, அந்த புகைப்படங்கள், இருவேறு சம்பவத்தின் தொடர்புடையதாகும்.

இப்படியாக, தவறான புகைப்படங்கள், பழைய செய்தி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, தற்போது நிகழ்ந்தது போல சித்தரித்து, TamilanMedia இணையதளம் வெளியிட்டுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி மற்றும் அதில் உள்ள புகைப்படங்கள் தவறானவை மற்றும் பழையவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழப்பு: பழைய செய்தியால் திடீர் பரபரப்பு

Fact Check By: Pankaj Iyer 

Result: False