பிரபல நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நடிகை காயத்ரி ரகுராம் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.

இந்த பதிவை E Prabavalavan என்பவர் 2020 ஜூலை 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பற்றி பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் சில கருத்துக்கள் கூறியது தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையே சமூக ஊடகங்களில் காரசார விவாதம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் கருத்து பதிவிடப்பட்டுள்ளது. அதற்குள்ளாக நாம் செல்லவில்லை. புதிய தலைமுறை நியூஸ் கார்டு உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

காயத்ரி ரகுராம் பிரபல நடிகை, நடன இயக்குநர், பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் பங்கேற்றவர்கள் அவர் ஏதாவது குற்ற வழக்கில் சிக்கியிருந்தால் அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்ற சம்பவம் ஏதும் நடந்ததா என்று தேடினோம். நம்முடைய தேடலில் அது போன்ற தகவல் எதுவும் இல்லை.

அதே நேரத்தில் நடிகை காயத்ரி ரகுராமின் சமூக ஊடக பக்கங்களில் அவர் பதிவிடும் போது எல்லாம் இந்த நியூஸ் கார்டை பதிலாக பதிவிட்டு உண்மையா என்று பலரும் பல ஆண்டுகளாக கேள்வி எழுப்பி வருவது தெரிந்தது.

Archived Link

செய்திகளில் ஆராய்ந்த போது கடந்த 2018ம் ஆண்டு அவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாகவும், அதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது தெரிந்தது. அதன் பிறகு அந்த தகவல் தவறானது, நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவில்லை என்று அவர் விளக்கம் அளித்த செய்தியும் கிடைத்தது. மது அருந்தியது தொடர்பான செய்தியே இருக்கும்போது, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

patrikai.comArchived Link

பிரேக்கிங் செய்தியிலிருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போல இது உள்ளது. ஆனால், இந்த நியூஸ் கார்டும் பார்க்க அசலானது போல இல்லை. வழக்கமாக புதிய தலைமுறை பயன்படுத்தும் தமிழ் ஃபாண்டு போலவும் இல்லை. எனவே, போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தது.

எனவே, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் அனுப்பிக் கேட்டபோது இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில், நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.க பிரமுகருடன் பாலியல் வழக்கில் சிக்கினார் என்று பகிரப்படும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு சிறிது உண்மையுடன் நிறைய தவறான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உல்லாச விடுதியில் காயத்ரி ரகுராம் சிக்கியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False