2019 டிசம்பர் மாதத்தில் 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அதிசயம்:- உண்மை என்ன?

சமூக ஊடகம் | Social

‘’2019 டிசம்பர் மாதத்தில் 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அதிசயம் உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

Vasanti Iyengar என்பவர் கடந்த நவம்பர் 20, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில் 2019 டிசம்பர் காலண்டர் எனக் கூறி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, ‘’இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5 சனி, 5 ஞாயிறு மற்றும் 5 திங்கள் இருக்கும். இது 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். சீனர்கள் இதை ‘’ Bag Full Of Money’’ என்று அழைக்கிறார்கள். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள், 4 நாட்களுக்குள் பணம் வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். சீன ஃபெங் சுய் அடிப்படையில் இந்த செய்தியை அனுப்பாதவர் இந்த சிறந்த வாய்ப்பை இழக்க நேரிடும்… நான் என் பங்கைச் செய்கிறேன், உங்களுக்கு ஒருபோதும் தெரியாது!,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்யும் அதே வேளையில், இது பொய் என்று கூறி சிலர் கமெண்ட் பகிர்ந்திருந்ததையும் காண நேரிட்டது. 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது தவறான தகவலாகும். ஆம், இதுபற்றி நமது இலங்கை தமிழ் பிரிவு ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் கீழே உள்ள லிங்கில் தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Sri Lanka Tamil News Link 

எனினும், 2019 டிசம்பர் மாதத்தில் இவர்கள் கூறுவது போல 5 சனி, 5 ஞாயிறு மற்றும் 5 திங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் இது தவறான தகவல் என தெரியவருகிறது. 

அதாவது, 5 ஞாயிறு, 5 திங்கள் கிழமைகள் மட்டுமே 2019 டிசம்பர் மாதத்தில் வருகிறது. ஆனால், 4 சனிக்கிழமைகள் மட்டுமே உள்ளன. அதேசமயம், செவ்வாய்க்கிழமை 5 முறை வருகிறது. எனவே, இது தவறான தகவலாகும்.

அத்துடன், 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அதிசயம் எனக் கூறுகின்றனர். இதுவும் தவறான தகவல். ஓராண்டில், 5 சனி, 5 ஞாயிறு, 5 திங்கள் அல்லது 5 வெள்ளி, 5 சனி, 5 ஞாயிறு அல்லது 5 ஞாயிறு, 5 திங்கள், 5 செவ்வாய் என மாறி மாறி வருவது இயல்புதான். இதை வைத்துக் கொண்டு, தவறான தகவல் பரப்பியுள்ளனர். இதுபற்றி ஏற்கனவே பல செய்தித்தளங்களும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Quora Link Timeanddate.com Link Hoax-Slayer Website Link 

மேலும், இதில் சீன நம்பிக்கை அது இது என்பதும் ஒரு வதந்திதான்.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:2019 டிசம்பர் மாதத்தில் 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அதிசயம்:- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “2019 டிசம்பர் மாதத்தில் 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அதிசயம்:- உண்மை என்ன?

Comments are closed.