
‘’மகாராஷ்டிராவில் 24 வயது முஸ்லீம் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் சிலவற்றை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். முதலில இதுபற்றி ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என விதவிதமான கீவேர்ட் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். ஆனால், எந்த செய்தி விவரமும் கிடைக்கவில்லை.
இதன்பின்னர், இந்த புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். அப்போது இதுபற்றிய உண்மை விவரம் கிடைத்தது.
இதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா பகுதியில் சர்வதேச மகளிர் தின வாரத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் சுமன் சந்திரா இளம்பெண் ஒருவரை ஒருநாள் டிஎஸ்பி ஆக நியமிக்க திட்டமிட்டார். இதற்காக, Sahrish Kanwal என்ற 14 வயது சிறுமியை தேர்வு செய்து, ஒருநாள் டிஎஸ்பி ஆக நியமித்தனர். அந்த சிறுமி புல்தானா மாவட்ட டிஎஸ்பியாக பதவியேற்று ஒருநாள் முழுக்க பல்வேறு பணிகளை பார்வையிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இவை.
MaharashtraTimes Link | Archived Link |
Policenama Link | Archived Link |
எனவே, சர்வதேச அளவில் மகளிர் வாரம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, 14 வயது சிறுமியை ஒருநாள் டிஎஸ்பியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நியமித்து கவுரவித்துள்ளனர். அந்த புகைப்படங்களை எடுத்து, 24 வயதில் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்ற முஸ்லீம் பெண் என்ற தலைப்பில் வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
இதுதொடர்பாக எமது இலங்கை பிரிவினர் உண்மை கண்டறியும் ஆய்வு செய்து ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளனர். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மகாராஷ்டிராவில் 24 வயது முஸ்லீம் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றாரா?
Fact Check By: Pankaj IyerResult: False

sorry
Thanks for your service