செல்லூர் ராஜூ திறந்து வைத்த ரவுண்டானாவில் ஓட்டை: வைரல் புகைப்படம் உண்மையா?

அரசியல் தமிழகம்

‘’மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்த ரவுண்டானா இடிந்து விழுந்தது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் சில புகைப்படங்களை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த புகைப்படத்துடன் மேலும் சில புகைப்படங்களை சேர்த்து சிலர் தகவல் பகிர்வதையும் காண நேரிட்டது. 

Facebook Claim LinkArchived Link

இந்த புகைப்படங்களை பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மதுரையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் ஆங்காங்கே ரவுண்டானா நிறுவப்பட்டு வருகின்றன. இவற்றில் செல்லூர் பகுதியில் நிறுவப்பட்ட ரவுண்டானாவை தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று (மார்ச் 8) திறந்து வைத்தார். அப்போது எதிர்பாராவிதமாக ரவுண்டானாவின் ஒரு ஓரத்தில் கிரானைட் பதித்திருந்த இடத்தில் திடீரென ஓட்டை விழுந்தது. இதில் அங்கிருந்த அதிமுகவினர் பலர் நிலைதடுமாறி ரவுண்டானாவின் அடியில் உள்ள சாக்கடையில் விழுந்தனர். அமைச்சர் சற்று தள்ளி இருந்ததால் உயிர் தப்பினார்.  

Nakkheeran LinkArchived Link
News18 Tamil Nadu LinkArchived Link

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலர் கேலி, கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் மேலே நாம் பார்த்த பேஸ்புக் பதிவுகள்.

ஆனால், இந்த புகைப்படங்கள் உண்மையானவை கிடையாது. இவை எங்கே எடுக்கப்பட்டவை என்ற சந்தேகத்தில் ஒவ்வொன்றாக ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். அப்போது, இவை அனைத்துமே ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலம் ஒன்றின் புகைப்படம் என தெரியவந்தது. 

Twitter LinkArchived Link

இதன்படி, குருகிராமில் உள்ள பட்டாவ்டி பகுதியில் டெல்லி – ஜெய்ப்பூர் ரயில் தண்டவாளத்தின் மேலே பாலம் ஒன்று கட்டப்பட்டு, 2019 செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது.

IndiaTimes Link Archived Link 

இதையடுத்து அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது எடுத்த புகைப்படங்களைத்தான் மதுரை சம்பவத்துடன தொடர்புபடுத்தி பலரும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:செல்லூர் ராஜூ திறந்து வைத்த ரவுண்டானாவில் ஓட்டை: வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False