ஒரே முகம் கொண்ட 28 பேர் – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

சமூக ஊடகம் சமூகம்

ஒரே முகம் கொண்ட 28 பேர் ஆனால், வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

குரூப் போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், இவர்கள் யார், எங்கே எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை.

நிலைத் தகவலில், “உலகின் எட்டாவது அதிசயம். ஒரே முகம் கொண்ட 28 பேர். ஆனால், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, விருதை ஜெகன் என்பவர் 2019 நவம்பர் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

28 பேர் ஒரே மாதிரியான தோற்றம் ஆனால் வெவ்வேறு நாடுகள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையோ, இணைப்பையே வழங்கவில்லை. ஃபேஸ்புக் பதிவில் படம் சிறியதாக இருக்கும்போது எல்லா முகங்களும் ஓரளவுக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், இரண்டு முகங்கள் மட்டும் போட்டோஷாப் செய்யப்பட்டது போல கழுத்துப் பகுதியில் சரியாக வைக்காமல் தள்ளி வைத்திருப்பது தெரிந்தது. படத்தை பெரிதாக்கிப் பார்த்தபோது எல்லா முகமும் ஒன்றுதான், ஒரே போஸ் படத்தை எடுத்து போட்டோஷாப் செய்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.

இதை உறுதி செய்ய, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, “உலக அதிசயம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட 28 பேர்” என்று இந்த பதிவு சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக ஷேர் செய்யப்பட்டு வருவது தெரிந்தது. 

Search link

இந்தியா டைம்ஸ்சின் பெங்களூரு மிரர் இந்த படம் போலியானது என்று செய்தி வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. அதில், படம் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. ஒரே நபரின் தலையை மற்ற 27 பேரின் தலையில் வைத்து எடிட் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.  complaintlists.com என்ற இணையதளமும் இந்த புகைப்படம் போலியானது என்று தெரிவித்திருந்தது.

bangaloremirror.indiatimes.comArchived Link 1
complaintlists.comArchived Link 2

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்த புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஒரே முகம் கொண்ட 28 பேர் – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •