வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா?

உலக செய்திகள் சமூக வலைதளம்

‘’வள்ளியூர் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிப்பு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 

Bala A Kumar என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்திருக்கிறார். இதில் கூறப்பட்டுள்ளதை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் உண்மையான என கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2015ம் ஆண்டு முதல் வைரலாகப் பரவி வருவதாக தெரியவந்தது. 

இதன்படி, இது 100 முதல் 200 ஆண்டுகள் பழமையான மங்கோலிய புத்த துறவி ஒருவரின் சடலம் எனக் கூறப்படுகிறது. அவரது பெயர் தாஸி டோர்ஸோ இடிகிலோவ் என்றும், 1852ம் ஆண்டு பிறந்த அவர் சைபிரியா அருகே 1927ம் ஆண்டு தியானம் செய்த நிலையில் யோக முத்திரையில் அமர்ந்தபடி ஜீவ சமாதி அடைந்தார் என, சக புத்த துறவிகள் கண்டறிந்தனர். 1955ம் ஆண்டு அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதில் இன்று வரை எந்த மாற்றமும் ஏற்படாமல், சடலம் அழுகாமல் இருப்பது பலரையும் வியப்படைய செய்துள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்து, தமிழகத்தின் வள்ளியூர் பகுதியில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த துறவி என வதந்தி பகிர்ந்துள்ளனர்.

Independent.co.uk LinkWashington Post Link

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False