ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு உதவிய அஜித், விஜய்?

சமூகம் சர்வதேசம் | International

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு நடிகர்கள் அஜித், விஜய் நிவாரண நிதி வழங்கியதாக சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Ajith 2.png
Facebook LinkArchived Link

புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. நடிகர் அஜித் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில்,  “ஆஸ்திரேலியா தீ விபத்தை சரி செய்ய நடிகர் அஜித் தனது எஸ்.பி அக்கவுண்டில் இருந்து சுமார் 350 கோடி கொடுத்து உதவியுள்ளார்” என்று உள்ளது. இந்த பதிவை, Suriya Kumar என்பவர் 2020 ஜனவரி 8ம் தேதி வெளியிட்டுள்ளார்.

Ajith 3.png
Facebook LinkArchived Link

நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், “ஆஸ்திரேலியாவில் நடந்த தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு விஜய் 350 கொ(கோ)டியை நிர்வாணமாக (நிவாரணமாக) வழங்கியுள்ளார்” என்று உள்ளது. இந்த பதிவை Sura Sekar 3.O என்பவர் 2020 ஜனவரி 8ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அஜித், விஜய் தொடர்பான இரண்டு நியூஸ் கார்டுகளுமே உண்மையானது இல்லை என்பது நமக்கு தெரிந்தது. சில ரசிகர்களுக்கும் இது போலியானது என்று தெரிந்திருந்தது. ஆனால், பலரும் இதை உண்மை என்று நம்பி பரப்பி வருகின்றனர். எனவே, இவைப் பற்றி ஆய்வு செய்தோம்.

அஜித் தொடர்பான நியூஸ் கார்டு அவரது ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் உருவாக்கியது போல உள்ளது. வழக்கமான புதிய தலைமுறை நியூஸ் கார்டில் இருக்கும் பல விஷயங்கள் இதில் இல்லை. புதியதலைமுறை நியூஸ் கார்டில் தேதி, புதிய தலைமுறை இணையதள முகவரி உள்ளிட்ட விஷயங்கள் இதில் அழிக்கப்பட்டு இருந்தன. தமிழ் ஃபாண்ட், டிசைன் என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தது. 

Ajith 4.png

விஜய் தொடர்பான நியூஸ் கார்டு அவரை அசிங்கப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது போல உள்ளது. 2017ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி வெளியானதாக அந்த நியூஸ் கார்டில் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கினார் என்பதை நிர்வாணமாக வழங்கினார் என்று நடிகர் விஜய்யை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பரப்பியது போல இருந்தது. கேலி கிண்டல் ரகத்திலும் இது வரவில்லை. பலரும் எழுத்துப்பிழையைக் கூட கவனிக்காமல் ஷேர் செய்து வருகின்றனர்.

Ajith 5.png

இந்த இரண்டு நியூஸ் கார்டுகளையும் நியூஸ் 7 தமிழ் மற்றும் புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகிகளுக்கு அனுப்பி அவர்கள் தரப்பு கருத்தைக் கேட்டோம். இது நாங்கள் வெளியிட்டது இல்லை, போலி என்று உறுதி செய்தனர்.

ஆஸ்திரேலிய புதர் – காட்டுத் தீக்கு தமிழக சினிமா பிரபலங்கள் நிதி உதவி அளித்துள்ளார்களா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், ஹாலிவுட், விளையாட்டு பிரபலங்கள் பலர் நிதி உதவி அறிவித்து வரும் செய்தி நமக்கு கிடைத்தது. 

boredpanda.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

இரண்டும் போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்று சம்பந்தப்பட்ட ஊடக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா பிரபலங்கள் ஆஸ்திரேலியாவுக்கு நிதி உதவி அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நடிகர் அஜித், விஜய் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு பல நூறு கோடி நிதி உதவி அறிவித்தார்கள் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு உதவிய அஜித், விஜய்?

Fact Check By: Chendur Pandian 

Result: False