திருச்சி கோவிலில் மொபைல், விண்வெளி வீரர் சிற்பம்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூக ஊடகம் சமூகம்

திருச்சியில் உள்ள பஞ்சவர்ணசாமி கோவிலில் சைக்கிள், விண்வெளி வீரர், செல்போன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதாக படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

TEMPLE 2.png
Facebook LinkArchived Link

இரண்டு சைக்கிளில் பயணம் செய்பவர்கள் சிலை, தொடக்க கால மாடல் செல்போன் விண்வெளி வீரர் சிலை படங்கள் பகிரப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “ஒரு மிதிவண்டியை,செல்லிடப்பேசியை கண்டுபிடித்தவர் யார்? சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் எந்த விண்வெளி வீரரும் இருந்தாரா? பஞ்சவர்ணசாமி கோவிலில் உள்ள சிற்பங்களைப் பாருங்கள். 

பஞ்சவர்ணஸ்வாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ளது. தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. கோயில் சுவர்களில் ஒரு சைக்கிள், ஒரு விண்வெளி வீரர் மற்றும் ஒரு ரிமோட் செதுக்கப்பட்டுள்ளது. நவீன விஞ்ஞானம் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மெக்மில்லனால் மிதிவண்டி கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுகிறது. 

கோயில் தகவல்: பஞ்சவர்ணசாமி கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரத்தின் புறநகர்ப் பகுதியான உறையூரில் அமைந்துள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில் ஆகும். சிவன் ஐந்து வெவ்வேறு வண்ணங்களை சித்தரிப்பதாக நம்பப்படுகிறது, இது தலைமை தெய்வம்.

பஞ்சவர்ணஸ்வாமி 7 ஆம் நூற்றாண்டின் தமிழ் சைவ நியமனப் படைப்பான தேவாரம் நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் தமிழ் துறவி கவிஞர்களால் எழுதப்பட்டது மற்றும் பாடல் பெற்ற ஸ்தலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Creativity பிருந்தாவனம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Gayathri Ganesh என்பவர் 2019 நவம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சைக்கிள் சிற்பத்தில் ஒன்று தென்னமெரிக்காவைச் சார்ந்த இன்கா நாகரீகத்தைப் போல உள்ளது. விண்வெளி வீரர் சிற்பமானது ஸ்பெயினில் உள்ள தேவாலயத்தில் உள்ளது போல உள்ளது. ஆனால், அது எல்லாம் திருச்சி உறையூரில் உள்ள கோவில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். 

முதலில் ஒருவர் மட்டுமே உள்ள சைக்கிள் சிற்பத்தை ஆய்வு செய்தோம். அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது உறையூர் கோவிலில் அந்த சிற்பம் இருப்பது உறுதியானது. இது தொடர்பான வீடியோவும் நமக்கு கிடைத்தது. பிரவீன் மோகன் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டு, 2000ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சைக்கில் இருந்தது என்று கூறியிருந்தார். 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு சைக்கில் இருந்ததா என்று நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. 

Archived Link Search Link

அடுத்தது மொபைல் போன் படத்தை தனியாக எடுத்து, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த மொபைல் மற்றும் விண்வெளிவீரர் சிலை பற்றிய செய்தி நமக்கு கிடைத்தது. இந்த இரண்டும் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் உள்ளதாகவும், 1992ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டபோது இந்த சிலைகள் தேவாலய சுவற்றில் செதுக்கப்பட்டதாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன. இந்த சிற்பங்கள் கர்நாடகாவில் உள்ள ஒரு கோவிலில் உள்ளதாக வதந்தி பரவிய தகவலும் நமக்கு கிடைத்தது.333

theepochtimeS.ComArchived Link 1
smhoaxslayer.comArchived Link 2

மூன்றாவது, இன்கா நாகரீக சிற்பம் போல உள்ள சைக்கிள் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல இணையதளங்களில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டு இருந்தது. ஆனால், எங்கு இந்த சிற்பம் உள்ளது என்று கண்டறியமுடியவில்லை.

TEMPLE 3.png
Search Link

தொடர்ந்து தேடியபோது, இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு படங்களும் தமிழ்நாட்டில் உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பரவியதும், அதைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டிருப்பதும் தெரிந்தது. அதில், திருச்சி உறையூர் கோவில் 1910ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டதாகவும் அப்போது இந்த சைக்கிள் சிலை செதுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த இணையதளத்தில் இருந்துதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. அந்த படத்தில் இணையதளத்தின் வாட்டர் மார்க் தெளிவாகத் தெரிவதை காணலாம்.

TEMPLE 4.png
smhoaxslayer.comArchived Link

நம்முடைய ஆய்வு இந்த கோவில் 2000ம் ஆண்டு பழமையானதா, சிலை 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்டதா என்பது இல்லை. கோவில் என்பது நம்பிக்கை சார்ந்தது… அதன் பழமை பற்றி நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. இந்த சிற்பங்கள் அனைத்தும் குறிப்பிட்ட திருச்சி உறையூர் கோவிலில் உள்ளதா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.

நம்முடைய ஆய்வில், சைக்கிளில் ஒருவர் உள்ள சிற்பம் மட்டுமே திருச்சி கோவிலில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற சிலைகள் ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களைளச் சார்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. சைக்கிள் நபர் சிற்பம் தவிர்த்து மற்ற அனைத்து தகவலும் தவறானதாக உள்ளது. அனைத்துக்கும் மேலாக, பொய்யான தகவல் என்று வெளியான கட்டுரையில் இருந்தே படத்தை எடுத்து பதிவை வெளியிட்டுள்ளனர். இதன் அடிப்படையில், இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருச்சி கோவிலில் மொபைல், விண்வெளி வீரர் சிற்பம்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •