காமராஜருக்கு பின் தமிழகத்தில் யாருமே அணை கட்டவில்லை: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’காமராஜருக்கு பிறகு யாருமே தமிழகத்தில் அணை கட்டவில்லை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\kamaraj 2.png

Facebook Link I Archived Link

விவசாயம் மற்றும் மருத்துவ குறிப்புகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும், வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு எதோ ஒரு ஆதங்கத்தில் பகிரப்பட்டதாகவே தோன்றுகிறது. ஏனெனில், காமராஜர் இறந்த பிறகு, தமிழகத்தில், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என நிறைய முதலமைச்சர்கள் மாறி மாறி வந்துவிட்டனர். இதில், திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் 60 அணைகள் புதியதாய் கட்டப்பட்டுள்ளன. இவர்கள் மேற்கோள் காட்டும் காமராஜர் ஆட்சிக்காலத்தில், தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட அணைகள் 10 மட்டுமே.

எனவே, காமராஜர்தான் நிறைய அணைகள் கட்டினார் என்று பேசுவோர், இதுபற்றிய தெளிவான ஆதாரங்களை படித்துவிட்டு தகவல் பகிர்வது நலம். இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\kamaraj 3.png

இதில், குறிப்பாக, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைகளின் விவரம் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி ஆதாரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, உலகில் கட்டப்பட்ட முதல் அணை, கல்லணை என்ற தகவல் தவறாகும். சிரியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கல்லணைக்கு முன்பே, அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி , நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காமராஜருக்கு பின் தமிழகத்தில் யாருமே அணை கட்டவில்லை: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

Fact Check By: Parthiban S 

Result: False