
‘’தேர்தல் பிரசாரத்தின்போது கலா மாஸ்டரும், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் மசாலா பாடலுக்கு நடனமாடினார்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நடனமாடும் நிகழ்வு, சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு பதிவு செய்யப்பட்டதாகும். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிட்ட அண்ணாமலையை ஆதரித்து, சினிமா நடன இயக்குனர் கலா நடனமாடி வாக்கு சேகரித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், பாஜக சார்பான தேர்தல் பிரசார பாடல்தான் இடம்பெற்றிருந்தது.
இதனை கலா மாஸ்டர், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டும் உள்ளார்.
எனவே, இந்த வீடியோவில், ஆடியோ பகுதியை மட்டும் எடிட் செய்து, இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. உண்மையான வீடியோவையும், எடிட் செய்து பரப்பப்படும் வீடியோவையும் ஒப்பீடு செய்து, கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:தேர்தல் பிரசாரத்தின்போது கலா மாஸ்டர், பாஜக அண்ணாமலை மசாலா பாடலுக்கு நடனம் ஆடினார்களா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
