தான தர்மம் செய்வதில் உலகிலேயே முஸ்லிம்கள் முதலிடம்: ஃபேஸ்புக் குசும்பு

சமூக ஊடகம்

‘’அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளவில் முஸ்லிம்கள் முதலிடம்,’’ என்று கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\muslim 2.png

Facebook Link I Archived Link

இஸ்லாம் ஒர் இனிய மார்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, ஏதேனும் அறிவிப்பை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டதா என கூகுள் சென்று தேடிப் பார்த்தோம். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

C:\Users\parthiban\Desktop\muslim 3.png

இதையடுத்து, குறிப்பிட்ட நியூஸ் கார்டை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போதும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. அத்துடன், நியூஸ்7 தமிழ் டிவி, சமீப காலமாக இத்தகைய டெம்ப்ளேட் பயன்படுத்துவது இல்லை என்ற விவரமும் தெரியவந்தது.

C:\Users\parthiban\Desktop\muslim 4.png

இதையடுத்து, நியூஸ்7 தமிழ் டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று, இப்படி ஏதேனும் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதா என தேடிப் பார்த்தோம்.

நீண்ட நேரம் தேடியும், அப்படி எந்த நியூஸ் கார்டுமே வெளியாகவில்லை என தெரியவந்தது. அத்துடன், 2019 ஜனவரி 28 தேதியில் வெளியிடப்பட்ட நியூஸ்7 தமிழ் டிவி நியூஸ் கார்டுகள் அனைத்துமே, டெம்ப்ளேட் வேறு விதமாக இருந்தது.

C:\Users\parthiban\Desktop\muslim 5.png

இதையடுத்து, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவின் மீது நமக்கு சந்தேகம் வலுக்கவே, அதில் உள்ள கமெண்ட்களை ஆய்வு செய்தோம். அப்போது சில விசயங்கள் புரியவந்தன. முதலாவது விசயம், இவர்கள் பகிர்ந்திருந்த நியூஸ்கார்டு போலியான ஒன்று. சொதப்பலான முறையில் ஃபோட்டோஷாப் செய்து, அதனை பகிர்ந்துள்ளார்கள் என்பதும், இது போலியானது என்று அவர்களே கமெண்ட்டில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரியவந்தது.

C:\Users\parthiban\Desktop\muslim 6.png

எனவே மேற்கண்ட பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது. சுய விளம்பரத்திற்காக, அவர்களே சொந்தமாக இப்படி ஒரு பதிவை பகிர்ந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தான தர்மம் செய்வதில் உலகிலேயே முஸ்லிம்கள் முதலிடம்: ஃபேஸ்புக் குசும்பு

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •