மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா அறிவித்தாரா?

அரசியல் | Politics இந்தியா | India

இந்தியா முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

அமித்ஷா படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியா முழுவதும் மதம் மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் மத்திய உள்துறை அமைச்சர் – அமித்ஷா” என்று உள்ளது.

நிலைத் தகவலில், “அமித்ஷாவின் அடுத்த அதிரடி நாடு முழுவதும் மதம்மாற்ற தடைசட்டம் அமல்படுத்தப்படும் | இதை முதல்ல நிறைவேற்றுங்கள் கிறிஸ்தவ பயலுக ஆட்டம் அபாய எல்லையை தாண்டி சென்று கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, சித்தார்த் ஜி என்பவர் Republic Tamil News என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 1ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. பாரதிய ஜனதா கட்சித் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன்பு அமித்ஷா கூட அப்படி ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறினார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டில் தேதி இல்லை. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் என்று குறிப்பிட்டுள்ளதால், கடந்த ஆறு மாதங்களுக்குள் இந்த நியூஸ் கார்டு வெளியானதாக இருக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, அமித்ஷா இந்தியாவை இந்து நாடாக அறிவிப்பேன் என்று கூறியதாக ஒரு தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ்ப் பிரிவு ஆய்வு நடத்தி அது வதந்தி என்று உறுதி செய்தது. அப்போதுகூட, அவர் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டுவருவேன் என்று கூறியதாக எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது என்று பெரும்பாலான பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன

Search Linkndtv.comArchived Link

மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவருவது சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நாம் செல்லவில்லை. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவ்வாறு அறிவித்தாரா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அமித்ஷா பேசியது தொடர்பான செய்திகள் கிடைத்தன. அதில், என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி நாடாளுமன்றத்தில் அவர் பேசியது தொடர்பான செய்திகளே கிடைத்தன. எந்த இடத்திலும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அமித்ஷா கூறியதாக அந்த செய்திகளில் இல்லை. மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Search Link

சரி, தந்தி டி.வி நியூஸ் இந்த நியூஸ் கார்டு வெளியிட்டது உண்மையா என்று தேடினோம். என்.ஆர்.சி பற்றி அமித்ஷா நவம்பர் 21ம் தேதி பேசியிருந்தார். அந்க் காலகட்டத்தில் தந்தி டி.வி-யில் இந்த கார்டு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். நம்முடைய தேடலில் அப்படி எந்த ஒரு கார்டும் கிடைக்கவில்லை. நவம்பர் 20ம் தேதி அமித்ஷா பற்றிய ஒரு செய்தி வெளியிட்டுள்ளர். அதுவும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பானதாக இருந்தது. முக்கியசெய்தியாக வெளியிடாமல் அமித்ஷா படத்தோடு தனிப் பதிவாக அது இருந்தது.

Facebook LinkArchived Link

தந்தி டி.வி வெளியிடும் கார்டுக்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கார்டுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதும் தெரிந்தது. தந்தி டி.வி தமிழ் ஃபாண்ட்டைப் போல ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஃபாண்ட் இல்லை. மேலும், “இந்தியா முழுவதும் மதம் மாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும்” என்ற செய்தியோடு மத்திய உள்துறை அமைச்சர் என்று குறிப்பிட்டுவிட்டு மீண்டும் ஒரு ஐஃபன் போட்டுவிட்டு அமித்ஷா என்று குறிப்பிட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று கூறியிருந்தால் பிரச்னை இல்லை, இவர்கள் பதிவு படி பார்த்தால் மத்திய உள்துறை அமைச்சர் கூறியதாக அமித்ஷா கூறினார் என்று வருகிறது. 

முக்கிய செய்தி என்று தந்தி டி.வி வெளியிடும் கார்டு எல்லாம் ஸ்கிரீன்ஷாட் போலவே இருக்கும். இதனால், படம் மற்றும் வார்த்தைகள் தெளிவின்றியே இருக்கும். ஆனால், நாம் ஆய்வுக்கு எடத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டில் தந்தி டி.வி லோகோ, டிசைன் எல்லாம் அலசலாக தெளிவின்றி உள்ளது. ஆனால், அமித்ஷா படம் மற்றும் அவர் கூறியதாக வெளியான தகவல் மட்டும் மிகவும் தெளிவாக உள்ளது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தது.

நமக்கு கிடைத்த இந்த தகவல் அடிப்படையில், “இந்தியா முழுவதும் மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா அறிவித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False